Xiaomi mi9

முழுமையான காட்சி திரையை வழங்குவதற்கான முயற்சியில் ஒப்போ, சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பார்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக டிஸ்பிளேவிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள கேமரா நுட்பத்தினை இரு நிறுவனங்களும் பரிசோதித்து வருகின்றன.

சியோமி மற்றும் ஒப்போ இரு நிறுவனங்களும் நேற்றைக்கு வெளியிட்டுள்ள கேமரா சார்ந்த நுட்பத்தில் குறிப்பாக திரையின் மறைவில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் கேமராவை பெற்றதாக அமைந்துள்ளது.

திரை மறைவில் செல்ஃபி கேமரா

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சிறிய வீடியோ தொகுப்பில் டிஸ்ப்ளேவின் பின்பகுதியில் செல்ஃபி கேமரா இருக்கும். இதற்காகத் தனி இடம் வழங்கப்படாமல், முழு திரையும் பார்வைக்காக மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

 

பிபிகே எல்க்ட்ரானிக்ஸ் கீழ் செயல்படும் ஒப்போ சோதனை செய்து வருவதனால், இதன் ஒன்பிளஸ், விவோ ரியல்மி போன்ற நிறுவனங்களும் வரும் நாட்களில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.