இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன் வெளியாகும்

சியோமி தலைமையில் செயல்படுகின்ற பிளாக் ஷார்க் (Xiaomi Black Shark)  நிறுவன கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதை சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதன்மையான நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது.

கேம் ரசிகர்களை குறிவைத்து விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனில் மிக சிறப்பான கிராபிக்ஸ் அம்சத்துடன் உயர்வகேத்தில் இயங்கும் திறன் பெற்ற நவீன ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் லிக்யூடு கூலிங் சிஸ்டத்தை இடம்பெற்றிருக்கும்.

சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன்

இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற வகையில் சியோமி பிளாக் ஷார்க் நிறுவனத்தின் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக குளோபல் பிளாக் ஷார்க் தலவைராக உள்ள டேவிட் லீ தலைமையில், இந்தியா பிரிவு தலைவராக முன்னாள் ஒன்பிளஸ் தகவல் தொடர்புத் தலைவரான சிராக் நாகேந்திரா செயல்படுவார் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன் வெளியாகும்

பிளாக் ஷார்க் இந்திய சந்தையில் தனது பிளாக் ஷார்க், பிளாக் ஷார்க் ஹீலோ மற்றும் அடுத்து வரவுள்ள பிளாக் ஷார்க் 2 போனை வெளியிட வாய்ப்புள்ளது. கூடுதலாக கேமிங் சார்ந்த ஆக்செரீஸ்களை இந்நிறுவனம் வெளியிடும்.

இந்நிறுவனம் கடந்த வருடம் ஏப்ரலில் வெளியிட்ட 5.99 அங்குல முழு ஹெச்டி திரையை பெற்று விளங்கும் 2160×1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு விளங்கும், 18:9 ஆஸ்பெட் விகிதம் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் Kryo 385 கோர் மற்றும் Adreno 630 GPU பெற்று மல்டி ஸ்டேஜ் லிக்யூடு கூலிங் சிஸ்டம் அமைப்பினை பெற்றுள்ளதால், சிபியூ வெப்பத்தை 8 டிகிரி வரை குறைக்கலாம். பிளாக் ஷார்க் மொபைல் போன் சீனா சந்தையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குவதுடன், 8ஜிபி ரேம் பெற்ற மாடல் 128ஜிபி மெமரி கொண்டதாக விளங்குகின்றது.

இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன் வெளியாகும்

இந்த மாடலின் மேம்படுத்தப்பட்ட பிளாக் ஷார்க் ஹீலோ மாடலில் 6.1 அங்குல முழு ஹெச்டி AMOLED திரையை பெற்று விளங்கும் 2160×1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு விளங்கும், 18:9 ஆஸ்பெட் விகிதம் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் Kryo 385 கோர் மற்றும் Adreno 630 GPU பெற்று மல்டி ஸ்டேஜ் லிக்யூடு கூலிங் சிஸ்டம் பெற்றுள்ளது. 10 ஜிபி ரேம் பெற்ற மாடல் 256 ஜிபி மெமரி கொண்டதாக விளங்குகின்றது.   இதிலும் 4,000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன் வெளியாகும்

அடுத்து இன்னும் சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள புதிய பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் விற்பனைக்கு வரவுள்ளது.