சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

குறைந்தபட்ச விலையில் அதிகபட்ச வசதிகளை வழங்கும் சியோமி நிறுவனத்தின் , புதிய அறிமுகமாக வெளியாகியுள்ள சியோமி பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க்

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கேம் பிரியர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்ளாக் ஷார்க் மொபைல் போன் திரவத்தினால் குளிர்விக்கும் வகையிலான நுட்பத்தை பெற்றிருப்பதனால், மொபைலின் பேட்டரி வெப்பத்தால் வெடிக்குமோ என்ற பயத்தை உதறி தள்ளி மணிக்கணக்கில் கேமை விளையாடலாம் என ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது.

5.99 அங்குல முழு ஹெச்டி திரையை பெற்று விளங்கும் 2160×1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு விளங்கும், 18:9 ஆஸ்பெட் விகிதம் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் Kryo 385 கோர் மற்றும் Adreno 630 GPU பெற்று மல்டி ஸ்டேஜ் லிக்யூடு கூலிங் சிஸ்டம் அமைப்பினை பெற்றுள்ளதால், சிபியூ வெப்பத்தை 8 டிகிரி வரை குறைக்கலாம். பிளாக் ஷார்க் மொபைல் போன் சீனா சந்தையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குவதுடன், 8ஜிபி ரேம் பெற்ற மாடல் 128ஜிபி ரேம் கொண்டதாக விளங்குகின்றது. மேலும் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வசதி வழங்கப்படவில்லை.

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கேமரா பிரிவில் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் பெற்று 12 MP f/1.75 + 20 MP f/1.75 பெற்று டுயல் எல்இடி பிளாஷ் கொண்டதாக விளங்குகின்றது முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான 20MP சென்சார் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

4,000mAh  பேட்டரி கொண்டு இயகப்படுகின்ற ப்ளாக் ஷார்க் மொபைலில் க்யூக் சார்ஜ் 3.0 சிஸ்டத்தை பெற்று X-style வடிவமைப்பை பெற்று நெட்வொர்க் சிக்னல் கொண்டுள்ளதால் சிக்னல் பிரச்சனையால் தவிக்க வேண்டிய நிலையிலிருந்து காக்கும் திறன் கொண்டிருப்பதுடன், மிகுந்த ஆர்வத்துடன் கேம் விளையாடும் போது டிஎன்டி என்ற முறையின் மூலம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய தொல்லைகளை தவிர்க்கலாம்.

ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குகின்ற பிளாக் ஷார்க் மொபைல் போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.0, GPS/GLONASS/Beidou மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவற்றை கொண்டு விளங்குகின்ற இந்த மொபைலை ப்ளூடுத் 4.0 ஆதரவை பெற்ற கேம்பேட் வாயிலாக இணைத்துக் கொள்ளலாம். இந்த கேம்பேட் 150mAh பேட்டரியை பெற்றுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

சீனா சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 31,200 (6GB Ram+64GB) , மற்றும் டாப் மாடல் விலை ரூ. ரூ. 36,300 (8GB Ram+128GB) ஆகும். ப்ளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியா வருகை குறித்து எந்த தகவலும் இல்லை