கேமிங் ஸ்மார்ட்போன் சியோமி பிளாக் ஷார்க் படம் வெளியானதுவருகின்ற ஏப்ரல் 13ந் தேதி அறிமுகமாக உள்ள சியோமி நிறுனத்தின் புதிய சியோமி பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன் X ஆன்டனா நுட்பத்தினை கொண்டதாக  வரவுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க்

 

மொபைல் போன் சோதனை தளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில், சியோமி பிளாக் ஷார்க் போன் முழு உயர்தர தெளிவு திரையுடன் 1080×2160 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 18: 9 என்கிற திரை விகிதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி குவால்காம் 845 சிப்செட் பெற்ற 8ஜிபி ரேம் கொண்டு 256ஜிபி வரையிலான உள்ளீட்டு சேமிப்பினை கொண்டதாக அமைந்திருக்கலாம்.

சமீபத்தில் ரேஸர் ஸ்மார்ட்போன் நிறுவனம் வெளியிட்ட கேமிங் செயல்திறன் மொபைலுக்கு எதிராக களமிறங்க உள்ள இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்தபட்ச ஆதரவு விலையில் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த மொபைல் தொட ர்பாக வெளியிடப்பட்டு வரும் டீஸரில் வெளியான தகவல்களின் அடிப்படையில் X antenna’ technology அம்சத்தை GPS, Wi-Fi, LTE, மற்றும் MIMO நான்கு நுட்பங்களை கொண்டதாக வரவுள்ளது.

கேமிங் ஸ்மார்ட்போன் சியோமி பிளாக் ஷார்க் படம் வெளியானது

சீனாவில் ஏப்ரல் 13ந் தேதி நடைபெறுகின்ற வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.