மடிக்ககூடிய ஷியோமி ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது

இரு புறங்களில் மிக எளிமையாக மடிக்ககூடிய ஷியோமி ஸ்மார்ட்போன் வீடியோ ஒன்றை ஷியோமி நிறுவன துனை நிறுவனர் லின் பின் வெளியிட்டுள்ளார். இந்த போன் மிக சிறப்பான நவீன நுட்பத்தை பெற்றதாக விளங்கும்.

ஷியோமி ஃபோல்டெபிள் போன்

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சீன நிறுவனமான ஷியோமி துனை நிறுவனர் லின் பின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மொபைல் போன் இரு புறங்களில் மடிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது.

MIUI இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலை MIX Flex அல்லது Dual Flex என்ற பெயரில் வெளியிட வாய்ப்புள்ளது. மிக அகலமான காட்சி திரையில் இரு பக்கமும் மடித்த பின்னர் மொபைல் போன்று காட்சியளிக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வலது மற்றும் இடது என இரு பக்கங்களில் மடித்தாலும், எவ்விதமான சுனக்கமும் இல்லாமல் வீடியோ தொடர்ந்து இயங்குகின்றது. மடித்தால் மிக இலகுவாக மொபைல் போல காட்சியளிக்கின்றது. முழுமையான காட்சி திரையில் டெப்லெட் போல காட்சியளிக்கின்றது.

மடிக்ககூடிய ஷியோமி ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது

 

ஷியோமி வெளியிட்டுள்ள வீடியோவை காணலாம்.