ரூ.4,999-க்கு சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்ததுஇந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக மிக வேகமாக வளர்ந்து வரும் சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ரூ.4,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5A

ரூ.4,999-க்கு சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

 

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ரெட்மி 5ஏ மொபைல் போன் மிகவும் சவாலான விலையில் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியான டிசைனுடன் 5 அங்குல திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக 296 PPI பிக்சல் அடர்த்தியுடன் விளங்கும் 5ஏ போன் டார்க் கிரே, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய மூன்று நிறங்களுடன் கிடைக்கும்.

பிராசெஸர் & ரேம்

ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மிக சிறப்பான செயலாற்றலை வெளிப்படுத்தும் வகையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைல் 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் உடன் பிரத்தியேகமான கூடுதல் சேமிப்பினை மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

ஆட்டோஃபோகஸ், எல்இடி ஃபிளாஷ் மற்றும்  f/2.2 ஆகியவற்றுடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக விளங்குகின்றது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி படங்கள் பதிவு செய்யும் வகையிலான 5 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தில் செயல்படும் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் 3,000mAh பேட்டரியுடன் 8 நாட்கள் ஸ்டேன்ட் பை டைம் கொண்டதாக கிடைக்கின்றது.

மற்றவை

ரெட்மி 5ஏ போனில் வை-ஃபை, ஐஆர் பிளாஸ்டர், இன்ஃபிரா ரெட், 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டதாக கிடைக்கின்றது.

விலை

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்புடன் ரூ.5,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 லட்சம் அலகுகள் ரூ.1000 தள்ளுபடியில் ரூ.4,999 விலைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்புடன் ரூ.6,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.4,999-க்கு சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

ஜியோ சிறப்பு சலுகை

ரெட்மி 5ஏ மொபைல் போனுடன் ரூ.199 விலையில் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

மேலும் ரூ.1000 வரை கேஸ்பேக் வழங்கும் நோக்கில், அடுத்த 12 மாதங்களுக்கு ரூ.100 வரை கேஸ்பேக்கினை வழங்குகின்றது.

ரூ.4,999-க்கு சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here