1999 ரூபாயில் சியோமி Mi செக்கியூரிட்டி கேமரா வெளியானது - Xiaomi Mi Home

வீட்டின் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை வழங்க சியோமி Mi ஹோம் செக்கியூரிட்டி கேமரா ரூபாய் 1,999 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த கேமரா 14ந் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு Mi இணையதளத்தில் கிடைக்க தொடங்குகின்றது.

சியோமி நிறுவனம் மொபைல் போன் தவிர மி ஏர் ப்யூரிஃபையர், இயர்போன்ஸ், பவர் பேங்க், செக்கியூரிட்டி கேமரா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள Mi ஹோம் செக்கியூரிட்டி கேமராக்கள் இந்தியாவில் ,தற்போது அதன் விலை ரூபாய் 2,299 க்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக விலையாக mi.com வலைதளத்தில் ரூபாய் 1,999க்கு கிடைக்கின்றது.

1080 பிக்ல் திறன் முறையில் வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட கேமிரா லென்ஸை பெற்றதாக உள்ளது. இந்த பாதுகாப்பு கேமிராவில் செயற்கை நுண்ணறிவு, இரவில் தெளிவான படங்கள பெற இன்ஃப்ரா ரெட், கூடுதலாக ஆடியோ பதிவு பெறுவதுடன் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.

இந்த கேமராவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அம்சமாக இரு விதமான செயற்பாட்டை காண வழி வகுக்கின்ற பிக்சர் இன் பிக்சர் எனப்படும் புதிய மல்டி டாஸ்கிங் அமைப்பையும் கொண்டுள்ளது.