xiaomi-folding-pop-up

பிரபலமான மோட்டோரோலா ரேசர் மடிக்கும் ஸ்மார்ட்போன் போன்றதொரு மாடலை சியோமி ஸ்மார்ட்போன் தயாரிக்க உள்ள மாடலுக்கு காப்புரிமை கோரிய விண்ணப்பத்தில் இடம்பெற்றிருந்த படம் வெளியாகியுள்ளது.

முன்பாகவே ஒருமுறை சியோமி மடிக்கின்ற மொபைலை காட்சிப்படுத்தியிருதாலும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. முன்னணி தயாரிப்பாளர்களான சாம்சங், ஹுவாய் , மோட்டோ போன்ற நிறுவனங்களில் மடிக்கூடிய மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காப்புரிமை கோரிய ஷியோமி ஒரு கிளாம்ஷெல் மடிப்பு தொலைபேசியை அறிமுகப்படுத்தலாம் என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால், புதிய காப்புரிமை பெற்ற மொபைல் சாதனம் பாப்-அப் செல்பி கேமராவையும் கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. இரட்டை பின்புற கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ் கொண்டதாக காணப்படுகின்றது.

மடித்த பிறகு பின்புறத்திலும் ஒரு திரை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் விளங்கும். இந்த சிறிய டிஸ்பிளே மூலம் அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை விரைவாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு ரூ.1,64,000 விலையில் கிடைக்கின்ற நிலையில், சியோமியின் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம். இந்தியா வருகை குறித்தான தகவல் இல்லை.

 xiaomi folding

உதவி – letsgo digital