இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 வருகை விபரம்2018 ஆம் ஆண்டின் சியோமி நிறுவனத்தின், முதல் மாடலாக இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 என்ற பெயரில் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் என இருமாடல்களை அறிமுகம் செய்திருந்தது, இதன் அடிப்பட்டையில் நோட் 5 மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5

சமீபத்தில் சீனா சந்தையில் வெளியிடப்பட்ட மாடலை சியோமி ரெட்மி 5 மற்றும் சியோமி ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு மாடல்களின் அடிப்படையில் இந்தியாவில் ரெட்மி நோட் 5 என்ற பிராண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

Redmi 5 Plus ஆனது 5.99 அங்குல முழு HD + (1080 × 2160 பிக்சல்கள்) காட்சி 18: 9 விகிதத்துடன் கூடியதாக உள்ளது. இது 2.0GHz Octa-core Snapdragon 625 SoC உடன் இணைந்து Adreno 506 ஜி.பீ.யூ உடன் இணைந்துள்ளது.

பிராசெஸர் &ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 3 ஜிபி ரேமில் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.

கேமரா

ஆட்டோபோகஸ் உடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா முன்புறத்தில் உள்ளது.

பேட்டரி

இது 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இது MIUI 9 உடன் Android 7.1 நௌகட் மென்பொருள் கொண்டதாக இயங்குகிறது.

சமீபத்தில் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெருமையை சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here