மே 8 ஆம் தேதி 108 எம்பி கேமரா Xiaomi Mi 10 விற்பனைக்கு வெளியாகிறது

சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் 108 மெகாபிக்சல் சியோமி Mi 10 மொபைல் மே 8 ஆம் தேதிக்கு விற்பனைக்கு வெளியாகவுள்ளது. கோவிட்-19 பரவலால் நாடு முழுவதும் லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

Mi 10 வரிசையில் Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite 5G மற்றும் Mi 10 லைட் ஜூம் எடிஷன் போன்றவை சீனா, ஐரோப்பாவின் சில நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற சியோமி மி10 மாடல் 6.67 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவில் 2340 × 1080 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரீஃபெரஷ் ரேட் பெற்றுள்ளது.

5ஜி ஆதரவினை பெற்ற ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்டு 12 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆதரவினை பெற்றுள்ளது. Mi 10 பிரைமரி ஆப்ஷனில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 108MP முதன்மை கேமரா சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை மற்றும் பின்புறத்தில் 2MP டெப்த் சென்சார் போன்றவற்றை வழங்கியுள்ளது.

பஞ்ச் ஹோல் டிசைன் பெற்ற கேமராவினை 20 மெகாபிக்சல் அமைப்பினை முன்புறத்தில் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் Xiaomi Mi 10 மாடல் விலை 799 யூரோ (ரூ.66,625) மதிப்பில் துவங்குகின்றது.