4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்

இந்தியாவில் சீனாவை தலைமையிடமாக கொண்ட ஜியோமி நிறுவனம் நான்காம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 4 ரூபாய்க்கு எம்ஐ எல்.இ.டி டிவி,  ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் எம்ஐ பேண்ட் 2  ஆகியவற்றை விற்பனைக்கு அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் Mi.com இணையதளத்தில் ஜூலை 10ல் தொடங்கி 12 வரை நடத்தப்பட உள்ள நிலையில், எம்ஐ ரிவார்ட்’ உறுப்பினர்களுக்கு ஜூலை 9-ம் தேதி இரவு 12 மணி முதல் விற்பனைக்கு வழங்கப்பட உள்ளது.

எம்ஐ ஃபிளாஷ் சேல்

சியோமி நிறுவனம், தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில், 4 ரூபாய் விலையில் ஃபிளாஷ் விற்பனையை ஜூலை 10, மற்றும் ஜூலை 12 ஆகிய இரு தினங்களில், தினமும் மாலை 4 மணிக்கு நடத்தும். இந்த விற்பனையில் ரெட்மி Y1, Mi எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4 (55 inch), ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி Y2 மற்றும் Mi பேண்ட் 2  போன்றவை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இலாமல், நான்கு ரூபாய்க்கு பெறலாம்.

4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்

மற்றவை

Mi மிக்ஸ் 2 ரூ. 27999 ( ரூ. 29,999), Mi மிக்ஸ் 2 ரூ. 14,999 ( ரூ. 15,999), டிராவெல் பாக்பேக் ரூ. 1,899 (ரூ. 1,999), Mi இயர் ஃபோன்ஸ் ரூ. 649 (ரூ. 699), Mi பேண்ட் 2 ரூ. 1,599 ( ரூ. 1,799). சியோமி ஒரு பயண காம்போ சலுகையை அறிவித்துள்ளது, இதில் Mi ட்ராவெல் பாக்பேக் ( ரூ. 1,999 மதிப்புள்ளது) மற்றும் Mi செல்ஃபி டிரைபாட் (ரூ. 1,099 மதிப்பு) ஆகிய இரண்டும் சேர்த்து ரூ. 2,948-க்கு கிடைக்கும். இதுபோலவே Mi பேண்ட் HRX (ரூ. 1,299), Mi பேண்ட் ஸ்ட்ராப் ப்ளூ (ரூ. 199) உடன் லைஃப் ஸ்டைல் காம்போ சலுகையாக ரூ. 1,398- க்கு கிடைக்கும்.

எஸ்பிஐ, பேடிஎம் மற்றும் மொபிக்விக் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆஃபர்களையும், கேஷ்பேக்குகளையும் தர இருக்கின்றது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு ரூ. 7,500 மேல் விலை கொண்ட பொருட்களை வாங்கும் போது அதிகபட்சமாக 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதுபோலவே பேடிஎம் மூலம் ரூ. 8,999 வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை கேஷ் பேக் கிடைக்கும்.

ப்ளின்க் அண்ட் மிஸ்

ப்ளின்க் அண்ட் மிஸ்’ என்ற டீல் வாயிலாகெ சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது ஜூலை 10 முதல் 12 வரை மாலை 6 மணிக்கு நடைபெறும் விற்பனையில், ரெட்மி நோட் 5 மற்றும் Mi VR ப்ளே காம்போ ரூ. 9,999 விலையில் கிடைக்கும். ரெட்மி Y1 மற்றும் Mi ப்ளூடூத் ஹேட்செட் காம்போ ரூ. 8,999 விலையில் கிடைக்கும். இதுபோலவே எம்ஐ பாக்கெட் ஸ்பீக்கர் மற்றும் எம்ஐ இயர்ஃபோன் பேசிக் காம்போ ரூ. 1,499 விலைக்கு கிடைக்கும். 10000mAh எம்ஐ பவர் பேங்க் 2i மற்றும் Mi ரோலர்பால் பெண் காம்போ ரூ. 899 விலைக்கு கிடைக்கும். இந்த அனைத்து காம்போக்களும் 200 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதை தவிர, 50 எண்ணிக்கையில் Mi ஏர் ப்யூரிஃபையர் ஃபில்டர் ரூ. 8,999 விலையில் கிடைக்கும்.