குறைந்த விலையல் பல்வேறு வசதிகளை பெற்ற சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் MIUI 9 இயங்குதளத்துடன் இன்று சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மீ 5 எக்ஸ் அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டூயல் கேமரா, 4GB ரேம் என அசத்தும் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

சியோமி Mi 5X ஸ்மார்ட்போன்

இரட்டை பிரவு கேமரா, 4ஜிபி ரேம் போன்ற வசதிகளுடன் கூடிய மிக சிறப்பான சியோமி மீ 5X மொபைல் புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு, கோல்டு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களுடன் யூனிமெட்டல் பாடியுடன் கூடிய அம்சத்தை பெற்ற மீ 5எக்ஸ் மொபைலில் 5.5 அங்குல முழு ஹெச்டி LTPS திரையுடன் கூடிய 1080×1920 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாக 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய எம்ஐ 5எக்ஸ் கைரேகை சென்சார் முன்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா, 4GB ரேம் என அசத்தும் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

பிராசஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட புதிய  MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் 2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது. மேலும் சேமிப்பு திறனை 128GB வரை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா துறையில் மீ 6 மொபைலை போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் இரட்டை 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு ஒரு கேமராவில் 1.25-micron பிக்சல் சென்சார் மற்றும் f/2.2 போன்றவற்றுடன் மற்றொரு 12 மெகாபிக்சல் கேமராவில் 1-micron பிக்சல் சென்சார் மற்றும்  f/2.6 பெற்றதாக பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் ரியல் டைம் ப்யூட்டிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா, 4GB ரேம் என அசத்தும் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

பேட்டரி

3,080mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு சியோமி எம்ஐ 5 எக்ஸ் மொபைல் இயக்கப்படுகின்றது.

மற்றவை

கைப்பேசியில் துனை விருப்பங்களாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஐஆர் பிளாஸ்டர்,  4G எல்டிஇ, VoLTE, Wi-Fi 802.11/b/g/n, புளூடூத், ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி டைப் போர்ட் சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விலை

சீனா சந்தையின் மதிப்பின் படி சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் போன் விலை CNY 1,499 (ரூ.14,200)

டூயல் கேமரா, 4GB ரேம் என அசத்தும் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

சியோமி மீ 5X நுட்ப விபரம்
வசதிகள் சியோமி மீ 5X
டிஸ்பிளே 5.5 இன்ச் ஹெச்டி
பிராசஸர் குவால்காம் 625 SoC
ரேம் 4GB
சேமிப்பு 64GB
பின் கேமரா 12MP டூயல் கேமரா
முன் கேமரா 5MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படை MIUI 9
பேட்டரி 3,080mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை CNY 1,499 (ரூ.14,200)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here