ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE

சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் தொடக்க விலை ரூ.21,155 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி Mi 9 போன் வரிசையில் விலை குறைந்த மாடலாக அமைந்துள்ளது.

சீன நாட்டில் வெளியிடப்பட்டுள்ள மீ 9 மொபைல் போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக  இந்த மொபைலில் X50 மோடம் மற்றும் 5ஜி டெலிகாம் ஆதரவை கொண்டதாக அமைந்துள்ளது.

ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE

சியோமி மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்புகள்

குவால்காம் நிறுவனத்தின் உயர்தர சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்ட இந்த போனில் 6 ஜிபி ரேம், மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாடுகளை தவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் கொண்ட Mi 9 SE (Special Edition) வேரியன்ட் 6 ஜிபி ரேம் பெற்ற குறைந்தபட்ச விலை கொண்டதாக வந்துள்ளது.

5.97 அங்குல திரை கொண்ட சியோமி மி9 எஸ்இ மாடலில் வாட்டடர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவினை பெற்று மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை இயக்க முதன்முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீ 9 எஸ்இ மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி என இரு விதமான உள்ளடக்க மெமரி தேர்வில் வழங்கப்பட உள்ளது.

ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE

கேமரா பிரிவில் இந்த மொபைல் போனில் 48 எம்பி கேமரா , 13 எம்பி கேமரா சென்சார் மற்றும் 8 எம்பி டெலிபோட்டோ சென்சார் பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 20 எம்பி கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுகின்ற சியோமி மி 9 எஸ்இ போனில் 3070 mAh திறன் கொண்ட பேட்டரி 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் அடிப்படை ஆதரவுகளான 4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0 போன்றவற்றை கொண்டிருக்கின்றது.

இந்த சியோமி மி 9 எஸ்இ மொபைல் போன் நீலம், வைலட் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் பிப்ரவரி 26ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விலை பட்டியல்

சீனாவில் வெளியிடப்பட்டுள்ள விலை அடிப்படையில் இந்திய விலை தோராயாக மாற்றியமைக்கப்பட்டுளது.

Xiaomi Mi 9 SE (6 ஜிபி ரேம் / 64 ஜிபி சேமிப்பு) – ரூ. 21,155 (RMB 1999 )

Xiaomi Mi 9 SE (6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு) – ரூ. 24,350 (RMB 2,299 )

ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE

 

ரூ.21,000க்கு சியோமி மி 9 SE ஸ்மார்ட்போன் அறிமுகம் -Xiaomi Mi 9 SE