பிப்., 20ந் தேதி விற்பனைக்கு வரவள்ள புதிய சியோமி நிறுவனத்தின் Mi 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் மூன்று கேமரா பெற்றதாகவும், 6 ஜிபி , 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்க உள்ளது.

மி9 மொபைல் போன் தொடர்பான பல்வேறு விபரங்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட இனை நிறுவனர் லீ ஜூன் வரை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை வெளிவந்த பல்வேறு விபரங்களின் அடிப்படையில் முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 சியோமி Mi 9 ஸ்மார்ட்போன்

மி 9 போனில் கேமரா பிரிவில் மூன்று சென்சார் கேமரா துளைகள் வழங்கப்பட்டுள்ளன. 48 எம்பி Sony IMX586 சென்சார் பிரைமரி கேமரா உடன் 16 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ் லைட் பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பித்தியேகமான 20 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் full-HD+ AMOLED திரையை சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ளது. திரை கண்ணாடியை பாதுகாக்க மற்றும் கண்களை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சத்தை பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் பாதுகாப்பினை பெற்ற Mi 9 மொபைல் போனில் 6 ஜிபி ரேம் , 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று மாறுபாடுகளுடன் எக்ஸ்புளோர் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் எடிசன் வகைகளில் கிடைக்க உள்ளது.

முதன்முறையாக சீனாவில் பிப்ரவரி 20ந் தேதி வெளியிடப்பட உள்ள சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விலை ரூ. 38,000 என தொடங்கலாம் இந்த மொபைல் போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு,  3,500mAh பேட்டரி பெற்றிருக்க வாய்ப்புள்ளது. மேலதிக விபரங்கள் அறிமுகத்தின் போது வெளிவரக்கூடும்.