வருகின்ற பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ள சியோமி மி 9 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா ஆப்ஷனுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு சீனாவில் வெளியிடப்பட உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டதாக வெளியாக உள்ளது.

சியோமி மி 9

சீனாவின் பிரபல மொபைல் போன் தயாரிப்பாளர் சியோமி நிறுவனம் பிப்ரவரி 20ந் தேதி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை சியோமி மி 9 என்ற பெயரில் வெளியிட உள்ளது. இந்த மொபைல் போன் 6.4 அங்குல முழு காட்சி திரை AMOLED , பிரைமரியாக எல்இடி ஃபிளாஷ் கொண்ட மூன்று கேமராக்கள் பெற்றுள்ளது. மிக விரைவாக 24w வேகமாக சார்ஜிங் வசதியுடன் கூடிய 3500mAh பேட்டரி உள்ளிட்ட வசதியுடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டதாக வரவுள்ளது.

கேமரா பிரிவில் வழங்கப்பட்டுள்ள 48 மெகாபிக்சல் , 12 மெகாபிக்சல் மற்றும் 3D ToF சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை பெற 24 மெகாபிக்சல் கேமரா பெற்றதாக வரக்கூடும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி உள்ளடக்க மெமரி ஆகிய இரண்டு ரகங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. சியோமி மி 9 ஸ்மார்ட்போன் விலை $436 (ரூ.30,890) ஆக தொடங்கலாம்.