சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சியோமி நிறுவனத்தின் மி 9 ஸ்மார்ட்போன் மாடலில் 48 எம்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட், வயர்லெஸ் சார்ஜ் உட்பட பல்வேறு வதிகளை பெற்றிருக்கின்றது. இந்த மொபைல் போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது.

மி 9 சீரிஸ் மொபைல்களில் மி 9 எஸ்இ , மி 9 , மற்றும் மி 9 டிரான்ஸ்பெரன்ட் எடிஷன் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மி 9 எஸ்இ ( ஸ்பெஷல் எடிசன் )போனில் மட்டும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் பெற்றுள்ளது.

சியோமி மி 9

6.39 அங்குல எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு கார்னிங் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு அம்சத்தைக் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பளே இருப்பதால் முழுமையான திரை நேர்த்தியாக இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு செயல்படுகின்ற நவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்  வசதியுடன், 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இரு மாறுபாடுகளில், 128 ஜிபி சேமிப்பை கொண்டதாக உள்ளது.

இதுதவிர டிரான்ஸ்பெரன்ட் எடிசன் மாடலில் மட்டும் 12 ஜிபி ரேம் பெற்று 256 ஜிபி சேமிப்பை கொண்டதாக அமைதிருக்கின்றது. இந்த மாடலின் சிறப்பு பின்புற பேனல் மிகவும் டிரான்ஸ்பெரன்டாக அமைந்திருக்கிறது.

கேமரா பிரிவில் இந்த மொபைல் போனில் 48 எம்பி கேமரா Sony IMX586 சென்சார்  , 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ சென்சார் பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 20 எம்பி கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

சியோமி மி 9 போனில் 3,300mAh திறன் கொண்ட பேட்டரி 20 வாட்ஸ் வயர் லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் அடிப்படை ஆதரவுகளான 4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0 போன்றவற்றை கொண்டிருக்கின்றது.

சியோமி Mi 9 விலை பட்டியல்

சீனாவில் வெளியிடப்பட்டுள்ள விலை அடிப்படையில் இந்திய விலை தோராயாக மாற்றியமைக்கப்பட்டுளது.

Xiaomi Mi 9 SE (6 ஜிபி ரேம் / 64 ஜிபி சேமிப்பு) – ரூ. 21,155 (RMB 1999 )

Xiaomi Mi 9 SE (6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு) – ரூ. 24,350 (RMB 2,299 )

Xiaomi Mi 9 (6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு) – ரூ. 31,800 (RMB 2999 )

Xiaomi Mi 9 ( 8 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு) – ரூ. 34,900 (RMB 3,299 )

Xiaomi Mi 9 Transparent Edition  (12 ஜிபி ரேம் / 256 ஜிபி சேமிப்பு) – ரூ. 42,300 (RMB 3999 )