சியோமி Mi A1 ரெட் எடிசன் விற்பனைக்கு வெளியானதுசியோமி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பெற்ற Mi A1  மொபைல் போனில் புதிய சிவப்பு நிற மாறுபாட்டில் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி Mi A1 ரெட் எடிசன்

சியோமி Mi A1 ரெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 7, ஓப்போ F3, இன்ஃபினிக்‌ஷ் ஜீரோ 5 ஆகிய மாடல்களில் ரெட் எடிசன் அறிமுகமாகியிருந்த நிலையில், தற்போது சியோமி நிறுவனத்தின் மி ஏ1 மாடலிலும் சிவப்பு நிற மாடல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளத்தை பின்பற்றி 5.5 .5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1920 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய மி ஏ1 மொபைலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் பிராசஸருடன் கூடிய 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்பு பெற்றுள்ளது.

பின்புற இரட்டை கேமரா 12 மெகபிக்சல் பெற்றதாக 2X ஆப்டிகல் ஜூம் கொண்டதாக வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3080 mAh பேட்டரிதிறன் கொண்டதாக உள்ள மி ஏ1 மொபைலில் சிவப்பு நிறத்தை தவிர கருப்பு, ரோஸ் கோல்டு மற்றும் கோல்டு ஆகிய நிறத்தில் கிடைக்க உள்ளது.

வருகின்ற டிசம்பர் 20ந் தேதி ஃபிளிப்கார்ட் மற்றும் mi.com என இரண்டு இணையதளங்களிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி Mi A1 ரெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here