இன்று முதன்முறையாக சியோமி மி1 ஏ1 விற்பனைக்கு கிடைக்கின்றதுஇந்தியாவில் இரட்டை கேமரா கொண்ட சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் இன்று பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி மி1 ஏ1 விற்பனை ஆரம்பம்

இன்று பகல் 12.00 மணிக்கு சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது. மேலும் பூர்வீகா, யூனிவர்செல்,சங்கீதா உள்ளிட்ட ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கின்றது.

ரூ.14,999 விலையில் கிடைக்கின்ற 5.5 அங்குல திரையுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டதாக 4ஜிபி ரேம் பெற்ற உள்ளடக்கிய 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வந்துள்ளது.

பின்புறத்தில் இரட்டை கேமரா 12 மெகபிக்சல் பெற்றதாக 2X ஆப்டிகல் ஜூம் கொண்டதாக வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மிக சிறப்பான பேட்டரி செயல்திறன் மிக்க மாடலாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மி ஏ1  மாடல் 3080 mAh பேட்டரிதிறன் கொண்டதாக கிடைக்கின்றது.

இன்று முதன்முறையாக சியோமி மி1 ஏ1 விற்பனைக்கு கிடைக்கின்றது

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள ஆண்ட்ராய்டு பி உள்ளிட்ட அப்டேஸ் கிடைக்க உள்ளது.  ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டதாகவும் வரவுள்ளது.

இன்று முதன்முறையாக சியோமி மி1 ஏ1 விற்பனைக்கு கிடைக்கின்றது இன்று முதன்முறையாக சியோமி மி1 ஏ1 விற்பனைக்கு கிடைக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here