Xiaomi Mi A3
Xiaomi Mi A3

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் செயல்படும், சியோமி Mi A3 மொபைல் போனில் 48 எம்பி கேமரா, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள, சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பயன்படுத்த கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ‘மி ஏ’ தொடர் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்தியாவில், முன்பாக Mi A1 மற்றும் Mi A2 ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புதிய மி ஏ3 மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ள தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

Mi A3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் உடன் 6.1 இன்ச் எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்ச் கொண்டுள்ளது.  சியோமி நிறுவனம் இந்த மொபைலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்டை கொண்டு வடிவமைத்து 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி / 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வெளியிட்டுள்ளது.

கேமரா விவரத்தை பொருத்தவரை, Mi A3 பின்புறத்தில் டிரிப்ள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அகல-கோணம் (118 டிகிரி) லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. கூடுதலாக, செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் நான்கு பிக்சல்களை கொண்டுள்ளது. குறைந்த வெளிச்சம் உள்ள நேரத்தில் சிறப்பான படங்கள் மற்றும் AI அழகுபடுத்தும் அம்சத்தை பெற்றுள்ளது.

Xiaomi Mi A3 Tamil
Xiaomi Mi A3 Tamil

மற்ற விருப்பங்களாக இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11ac, புளூடூத் 5,
யூ.எஸ்.பி டைப்-சி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மி ஏ3 போனில் 4,030 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது.

ஸ்பெயினில் வெளியிடப்பட்டுள்ள சியோமி Mi A3 மாடல் கிரே, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களை பெற்றுள்ளது. இந்த போனில் 4 ஜிபி ரேமுக்கு 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்புடன் 249 யூரோக்கள் ( ரூ. 19,225 தோராயமாக) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பின் விலை 279 யூரோக்கள் (ரூ. 21,540 தோராயமாக) 128 ஜிபி மாறுபாடு ஸ்பெயினில் ஜூலை 24 முதல் mi மற்றும் மி ஸ்டோர்களில் கிடைக்கும், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் விற்பனை தேதி பிறகு அறிவிக்கப்படும்.