mi a3

ரூ.12,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள சியோமி Mi A3 மொபைலில் டிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் இயங்குதளம் உட்பட கைரேகை சென்சார் என பல்வேறு வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கூகிளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள மி ஏ3 ஆண்ட்ராய்டு பை மூலம் இயக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்ட்ராய்டு Q புதுப்பிப்பைப் பெற உள்ளது.

6.1 அங்குல AMOLED HD + டிஸ்பிளே மற்றும் வாட்டர் டிராப் கொண்டுள்ள இந்த மாடலை இயக்க அட்ரினோ 610 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பொருத்தப்பட்டு உள்ளது. 4ஜிபி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வரை சலுகை உள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டைப் பயன்படுத்தி சேமிப்பை 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.

கேமரா பிரிவில், Mi A3 மூன்று கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் (118 டிகிரி) சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் AI மூலம் ஆதரிக்கப்படும் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை பெற்றுள்ளது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,030 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக மி ஏ3 வந்துள்ளது. பாதுகாப்பிற்காக, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஷியோமி Mi A3 விலை ரூ .12,999 முதல் தொடங்குகிறது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. மேலும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .15,999 விலையில் கிடைக்கும். புதிய Mi A3 ஆகஸ்ட் 23 முதல் மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்கு  அமேசான் இந்தியா மற்றும் மி.காம் வழியாக கிடைக்க உள்ளது. வெள்ளை, கிரே, மற்றும் நீலம் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.