விரைவில் வெளியாக  உள்ள சியோமி எம்ஐ மேக்ஸ் 3 பற்றி தெரிந்து கொள்ள...

சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ஸ்மார்ட் போன்கள் அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் உள்கவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருவதாக சியோமி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போன்கள் எப்போது அறிமுகம் செய்யபடும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விரைவில் வெளியாக  உள்ள சியோமி எம்ஐ மேக்ஸ் 3 பற்றி தெரிந்து கொள்ள...

சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ஸ்மார்ட் போன்களின் விலை
இந்த போன்களுக்கான சர்வதேச விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், சீனாவில் இந்த போன்கள் எந்த விலைக்கு விற்பனைக்கு வரும் என்பது வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் இந்த் போன்கள் சீனா கரன்சி மதிப்பில் 1,699-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக 17,900 ரூபாயாக இருக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போன்கள் சீனா கரன்சி மதிப்பில் 1,999-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்புக்கு தோரயமாக 21 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

சியோமி எம் மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனில் ஸ்பெசிபிகேஷன்கள்
டூயல் சிம் (நானோ) பொருத்தும் வசதி கொண்ட இந்த போன்கள் MIUI மற்றும் டாப் ஆண்டிராய்டு மூலம் இயக்குகிறது. 6.9 இன்ச் முழு HD+ (1080×2160 பிக்சல்) பேனல்களுடன் 18:9 அங்குல விகிதம் மற்றும் 520 நீட்ஸ் பிரைட்னஸ் கொண்டதாக இருக்கும்.

விரைவில் வெளியாக  உள்ள சியோமி எம்ஐ மேக்ஸ் 3 பற்றி தெரிந்து கொள்ள...

இந்த ஹாண்ட்செட்கள், கோல்காம் ஸ்நாப்டிராகன் 636 SoC, இத்துடன் 4ஜிபி/ 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் அட்ரினோ 509 ஜிபியூ மற்றும் 64ஜிபி / 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோர்ரேஜ் கொண்டதாக இருக்கும்.

இந்த போனில் இடம் பெற்றுள்ள கேமராகளை பொருத்தவரை, எம்ஐ மேக்ஸ் 3-களில் வெர்டிக்கல் வடிவில் டூயல் ரியர் கேமராகள் உள்ளன. இவை 12 மெகா பிக்சல் பிரைமரி மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சார்கள் f/1.9 அப்ப்பச்ச்ர் மற்றும் டூயல் LED பிளாஷ்களுடன் இணைக்கபட்டுள்ளது.

முன்புற கேமராவை பொறுத்தவரை, 8 மெகா பிக்சல் கேமரா சென்சார் f/2.0 அப்பச்சர் மற்றும் பேஸ் ரிக்கநேஷன் வசதி கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 5,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது குயிக் சார்ஜ் 3.0-வுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.