சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைப்புசியோமி நிறுவனத்தின் உயர் ரக அம்சங்களை பெற்ற பெசல் – லெஸ் மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மி மிக்ஸ் 2 போன் விலை ரூ.3000 வரை குறைக்கப்பட்டு ரூ.32,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மி மிக்ஸ் 2 போன்

சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைப்பு

கடந்த அக்டோபர் 2017 யில் அறிமுகம் செய்யப்பட்ட மி மிக்ஸ் 2 போன் ரூ.35,999 விலையில் வெளியிடப்பட்டு நிலையில், தற்போது ரூ.3000 வரை குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறுவனங்களுடன் கிடைக்க உள்ள மி மிக்ஸ் 2 மொபைல்போனில் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2160×1080 பிகசல் தீர்மானத்துடன் கூடியதாக கிடைக்கின்றது. மேலும் சிறப்பு எடிசன் மாடலாக செராமிக் மாடலில் பின்புற கேமராவில் 18 காரட் கோல்டு ரிங் இடம்பெற்றுள்ளது.

பிராசஸர் & ரேம்

Mi மிக்ஸ் 2 ஆஃமார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசஆருடன் 6ஜிபி ரேம் அடிப்படையாக பெற்றுள்ள நிலையில் 128GB உள்ளடக்கிய சேமிப்பு பெற்றதாக வந்துள்ளது. மேலும் மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.

கேமரா துறை

இந்த மொபைலில் 4-axis OIS, f/2.0, 5P லென்ஸ், PDAF, மற்றும் HDR ஆகியவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் 1080p வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

3400mAh பேட்டரி கொண்ட மாடலாக மி மிக்ஸ் 2 வெளியாகி உள்ளது.

மற்றவை

4G LTE, வை-ஃபை 802.11ac, GPS/ A-GPS, புளூடூத் v5.0, மற்றும் யூஎஸ்பி Type-C ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here