5ஜி உடன் சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்: MWC 2019

சீனாவின் சியோமி மொபைல் நிறுவனம், சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் சியோமி மி மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மி மிக்ஸ் 3 மொபைல் விலை 599€ (ரூ. 48,000 ) ஆகும்.

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி மற்றும் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஆதரவை பெற்ற மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் இணைய தரவிறக்க வேகம் 256 எம்பி உள்ள 15 நிமிட வீடியோவை வெறும் 1 விநாடியில் டவுன்லோட் செய்ய முடியும் என சியோமி குறிப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 3 நுட்பவிபரம் மற்றும் சிறப்புகள்

கருப்பு மற்றும் நீளம் என இரு நிறுவனங்களை பெற்றுள்ள சியோமி மொபைல் போன் நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 போனில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் இரு சிம் கார்டு ஆதரவை கொண்டதாக விளங்குகின்றது.

5ஜி உடன் சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்: MWC 2019

6.39 அங்குல திரை கொண்ட சியோமி மி மிக்ஸ் 3 போனில் திரையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்த்துடன், நேர்த்தியான வடிவமைப்பினை பெற்றதாக குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் கூடிய 6GB+128GB, 8GB+128GB, 8GB+256GB மற்றும் 10GB+256GB என மொதமாக நான்கு விதமான ரேம் மாறுபாட்டில் அமைந்துள்ளது.

கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனாக செயற்கை அறிவுத்திறன் பெற்ற டுயல் கேமரா ஆப்ஷனை 12எம்பி மற்றும் 12எம்பி சென்சார்களையும், செல்ஃபி உடன் வீடியோ அழைப்புகளுக்கு 24எம்பி மற்றும் 2எம்பி என டுயல் கேமரா தேர்வினை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றிய MIUI 10 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜிங் , வயர்லெஸ் சார்ஜிங் பெற்ற 3,200mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இரு சிம் கார்டு ஆதரவு, Wi-Fi, ப்ளூடூத் 5.0, மற்றும் USB Type-C port ஆகியவற்றை பெற்றுள்ளது.

5ஜி உடன் சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்: MWC 2019

ஐரோப்பாவில் சியோமி மி மிக்ஸ் 3 மொபைல் விலை 599€ (ரூ. 48,000 ) ஆகும். சாம்சங் மற்றும் ஒப்போ நிறுவன மாடல்களின் விலை வெளியிடப்படவில்லை. இதுதவிர இந்நிறுவனம் அரங்கில் சியோமி மி 9 சர்வதேச மாடலை வெளியிட்டுள்ளது.

5ஜி உடன் சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்: MWC 2019