சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் , சியோமி நிறுவனம் 5ஜி சியோமி மி மிக்ஸ் மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது. பிப்ரவரி 24ந் தேதி பார்சிலோனா நகரில் MWC 2019 அரங்கில் வெளியாகும்.

சியோமி மி மிக்ஸ் 3 மொபைலில் 5ஜி

வருகின்ற பிப்ரவரி 20ந் தேதி சியோமி மி 9 ஸ்மார்ட்போன் மூன்று கேமிராவுடன் வெளியாக உள்ள நிலயில், இந்திய சந்தையில் ரெட்மி நோட் 7 மொபைல் மற்றும் ரெட்மி கோ மொபைல்கள் வெளியாக உள்ளது. மேலும் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2019-ல் வெளியாக உள்ள மாடல்கள் குறித்தான முதல் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக 5ஜி முறையில் இயங்கும் மி மிக்ஸ் 3 சிஇஎஸ் 2019 கண்காட்சில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாடலின் உற்பத்தி நிலை விபரம் வெளியாகுவதுடன், கூடுதலாக மடிக்ககூடிய ஸ்மார்ட்போனை சியோமி வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

அனேகமாக 5ஜி மொபைலை தவிர்த்து சியோமி மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான வீடியோ முன்பே வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பான முக்கிய விபரங்கள் மற்றும் நுட்பம் சார்ந்த அம்சங்கள் வெளியாகலாம். பொதுவாக சியோமி நிறுவனம் 5ஜி மொபைல்களை சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை தொடங்குவதற்கு முன்பாக விற்பனக்கு வெளியிடலாம்.