சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்சீனாவில் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் அறிமுக விழாவில் சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு RMB 2,499 (Rs 24,500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன்

முந்தைய மி நோட் 2 மாடலை விட கூடுதலான மேம்பாடுகளை பெற்ற மி நோட் 3 ஸ்மார்ட்போன் பையோ மெட்ரிக் அம்சத்துடன் இருவிதமான உள்ளடக்க மெமரி மாறுபாட்டில் கிடைக்க உள்ளது.

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

டிசைன் & டிஸ்பிளே

அலுமினிய அலாய் பாடி பெற்ற மி நோட் 3 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களுடன் 5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1920 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் கூடியதாக வந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

குவால்காம் ஆஃனாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மாடல் 6ஜிபி நினைவகம் பெற்று 64ஜிபி மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதியுடன் கொண்டதாக கிடைக்கின்றது.

கேமரா துறை

பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்ட நோட் 3 மொபைலில் 12 மெகாபிகசல் f1.8 மற்றும்  12 மெகாபிகசல் f2.0 டெலிபோட்டோ லென்ஸ் கேமரா கொண்டதாக வந்துள்ளது.

முன்புறத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இதில் ப்யூட்டி ஃபீச்சர் வசதி கொண்ட 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக உள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட MIUI 9 அடிப்படையில் 3,500mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மற்றவை

4G LTE, வை-ஃபை 802.11ac, GPS/ A-GPS, புளூடூத் v5.0, மற்றும் யூஎஸ்பி Type-C ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.

விலை

சியோமி மி நோட் 3 (கருப்பு) 6GB/64GB – RMB 2499 (Rs.24,475)

சியோமி மி நோட் 3 (கருப்பு)  6GB/128GB – RMB 2,999 (Rs.29,732)

சியோமி மி நோட் 3 (நீலம்) 6GB/128GB – RMB 2,899 (Rs.28,393)

மேலும் படிங்க – சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விபரம்

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here