சியோமி 10000mAh & 20000mAh Mi பவர் பேங்க் 3i ரூ.899 முதல் அறிமுகம்

சியோமி நிறுவனம் இரண்டு புதிய Mi பவர் பேங்க் 3i மாடல்களை 10000mAh மற்றும் 20000mAh விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இரு பவர் பேங்குகள் 18 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் அமைந்திருக்கின்றது.

Mi பவர் பேங்க் 3i

12 அடுக்கு சுற்று பாதுகாப்பினை பெற்ற லித்தியம் பாலிமர் பேட்டரிகளைக் கொண்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தவிர, ப்ளூடூத் இயர்போன்கள் அல்லது ஃபிட்னெஸ் பேண்டுகள் போன்ற சாதனங்களை குறைந்த சார்ஜ் உள்ள நேரங்களிலும் சார்ஜ் செய்ய பவர் பொத்தானை இருமுறை அழுத்துவதன் மூலம் செயல்படுத்த முடியும். இரண்டு பவர் பேங்க் இரட்டை போர்டுகளான மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி பெற்றுள்ளது.

20,000 எம்ஏஎச் திறன் கொண்ட மி பவர் வங்கி 3i மூன்று போர்ட்களும், 10,000 எம்ஏஎச் பவர் பேங்க் இரண்டு போர்ட் வழங்குகிறது. 10,000 எம்ஏஎச் மாடல் முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரமும், 20,000 எம்ஏஎச் திறன் கொண்ட வேரியண்ட் ஏழு மணி நேரம் ஆகும்.

Mi Power Bank 3i 10,000mAh ரூ.899

Mi Power Bank 3i  20,000mAh ரூ.1,499