ஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது

வருகின்ற ஜூன் 7ந் தேதி இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவில் ரெட்மீ S2 என விற்பனை செய்யப்படுகின்ற இந்த மொபைல் இந்தியாவில் ரெட்மீ Y2 என்ற பெயரில் விற்பனை செய்யப்படலாம்.

சியோமி ரெட்மீ எஸ்2

ஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது

ஜூன் 7ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் வெளியிடப்பட உள்ள எஸ்2 போன் மிக குறைந்த விலையில் மிக சிறப்பான வகையில் செல்ஃபீ படங்களை பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதற்கு முன்பாக சீனாவில் எஸ்1 என்ற பெயரில் வெளியிடபட்ட ரெட்மீ இந்தியாவில் ரெட்மீ Y1 என வெளியிடபட்டது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற செல்பீ கேமரா பெற்று விளங்குவதனால், முன்புற கேமராவில் 16 மெகாபிஃசல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டு 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் ஆப்ஷனை கொண்டுள்ளது. 5.99 அங்குல காட்சி திரை பெற்று விளங்கும் Y2 மொபைலில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி என இருவிதமான வகைகளில் கிடைக்கப் பெறலாம்.

இரட்டூ சிம் கார்டு, கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகளுடன் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் பெற்றதாக 3,080mAh பேட்டரி கொண்டுள்ளது.