இந்தியாவில் ஷியோமி போகோ F1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

6 ஜி.பி. ரேம் , 128 ஜி.பி மெமரி பெற்ற மிகவும் நவீன வசதிகளை பெற்ற Poco F1 Armoured Edition மாடல் ரூ. 23,999 ஆகும். இதற்கு முன்பாக போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி விற்பனை செய்யப்படுகின்றது.

போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் திரையுடன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே பாதுகாப்பை கொண்டதாக வந்து ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் ஆகிய ரேம்களுடன் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிப மெமரி திறனை பெற்றதாக கிடைத்து வருகின்றது. இந்தியாவில் 6 ஜிபி புதிதாகவும், 8ஜிபி ரேம் மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய MIUI 9 இயங்குதளத்தில் செயல்படுகின்ற போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷனில் பின்புறம் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார் மற்றும் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா , முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது.
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மிக சிறப்பான பேட்டரி ஆயுளை வழங்குவதுடன், மிக விரைவாக சார்ஜிங் செய்ய குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், பாதுகாப்பு சார்ந்த  கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், போன்றவற்றுடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி,  வழங்கபட்டுள்ளது.
7 லட்சம் போகோ மொபைல்கள் விற்பனை ஆனதை முன்னிட்டு, தற்காலிகமாக இந்த மாடலுக்கு ரூ.1000 டிஸ்கவுன்ட் சலுகை வழங்கப்படுகின்றது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ஏற்கனவே ரூ.27,999 விலையில் வெளியிடப்பட்டது.