சிறிய பட்ஜெட்டில் அதிக உயர் செயல்திறன் கொண்ட  போகோ எப்1

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, இந்தியாவில் போகோ எப்1 போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்கள் உயர்தர ஸ்பேசிபிகேஷனை கொண்டிருந்தாலும் குறைந்த விலையிலேயே விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள போகோ எப்1 மொபைல்கள் 20 மற்றும் 30 ஆயிரம் விலைகளில் கிடைக்கிறது. மூன்று வகையாக வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், 6ஜிபி ரேம் + 64ஜிபி ரேம்+128ஜிபி ரோம், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரேம்+8ஜிபி ரோம், மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம், ரோம்களுடன், வெளியாகியுள்ள மூன்று வகை மொபைல்களின் விலைகள் முறையே 20,999, 23,999 மற்றும் 28,999 ரூபாய் களில் கிடைக்கும்.

சிறிய பட்ஜெட்டில் அதிக உயர் செயல்திறன் கொண்ட  போகோ எப்1

போகோ எப்1 மொபைல்கள் பெரியளவிலான 4000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. இது அதிக திறன் கொண்ட கேலக்சி நோட் 9-ல் உள்ளதை போன்று உள்ளது. இந்த போகோ எப் 1 மொபைல்கள் ஆண்டிராய்டு 8.1 ஓரியோ ஆபரேடிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது

சிறிய பட்ஜெட்டில் அதிக உயர் செயல்திறன் கொண்ட  போகோ எப்1

இந்த போனில் உள்ள பேட்டரிகள், 100 சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்டால், சாதாரண பயன்பாட்டில் ஒரு நாள் முழுவதும் இயங்கும். இந்த மொபைலில் ஆடியோ குவாலிட்டி சிறந்ததாக இல்லாத போதும், இந்த போன்களை பயன்படுத்தி சத்தமாகவும், ரெக்கார்டிங் எளிதாகவும் செய்து கொள்ள முடியும் இதில், 12MP+5MP டூயல் காமிராவுடன் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்களுடன் நல்ல குவாலிட்டி இமேஜ்களை படமாகக் முடியும். இந்த போனின் முன்புற காமிரா 20MP கொண்டதாக இருக்கும், இதில் இன்ஃப்ரா ரெட் பேஸ் லாக் வசதி கொண்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் இருட்டான இடத்திலும் தங்கள் போன் ஸ்கீரினை தெளிவாக பார்க்க முடியும்.