இந்தியாவில் சியோமி ரெட்மி 5 அறிமுக தேதி விபரம் வெளியானதுஇந்திய ஸ்மார்ட் மொபைல் போன் சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்கும் சியோமி நிறுவனம்,வருகின்ற மார்ச் 14ந் தேதி புதிய சியோமி ரெட்மி 5 மொபைல் போனை இந்திய சந்தையில் அமேசான் தளத்தின் வாயிலாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சியோமி ரெட்மி 5

#compactpowerhouse என்ற டேக்லைன் கொண்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள புதிய ரெட்மி 5 மொபைல் போன் நுட்பம் சார்ந்த விபரங்கள் மற்றும் விலை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

பிரத்தியேகமாக அமேசான் இந்தியா இணைய வரத்தக தளம், Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த புதிய மொபைல் போன் மார்ச் 14ந் தேதி வெளியாக உள்ளது.

நுட்ப விபரங்கள்

ரெட்மி 5 மொபைல்போனில் எதிர்பார்க்கப்படுகின்ற நுட்ப விபரங்களை இனி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். 5.7 அங்குல HD+ திரை கொண்டு 720×1440 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வரவுள்ள ரெட்மி 5 மொபைலில் மிக சிறப்பான வேகத்துடன் இயங்கும் வகையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு 2GB/ 3GB/ 4GB ஆகிய மூன்று விதமான ரேம் தேர்வுகளில் 16GB/ 32GB மற்றும் 64 ஜிபி ஆகிய உள்ளீட்டு சேமிப்பை பெற்றிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி MIUI 9 இயங்குதளத்தில் 3300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது. f/2.2 aperture, PDAF, மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 5 மொபைல் போன் ஆரம்ப விலை ரூ.9,999 என தொடங்க வாய்ப்புகள் உள்ளது.