இந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானதுஇந்திய சந்தையில் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சியோமி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகித்து வரும் நிலையில், புதிய சியோமி ரெட்மி 5 மொபைல் போன் ரூ.7,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5

இந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானது

சியோமி ரெட்மி நோட் 5 மாடலை போன்ற தோற்ற அமைப்பினை பெற்று விளங்கும் யூனி மெட்டல் பாடியுடன் மிக குறைந்த பெசல் கொண்ட ரெட்மி 5 மொபைல் போன் 5.7 அங்குல முழு ஹெச்டி எல்சிடி  திரையை கொண்டு 1440×720 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வந்துள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என மொத்தம் மூன்று விதமான ரேம்களுடன் 2ஜிபி ரேம் மாடல் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டிருப்பதுடன், 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றதாக வந்துள்ளது.

1080p தீர்மானம் கொண்ட ஹெச்டி வீடியோ பதிவை விநாடிக்கு 30 ஃபிரேம் என்ற அளவில் பதிவு செய்யும் திறனுடன், ஆட்டோஃபோகஸ், PDAF ஆகியவற்றை பெற்ற 12MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்பி படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானது

3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற சியோமி ரெட்மி 5 மொபைல் போன் ஆண்ட்ராய்டு 7 இயங்குதளத்தை பின்பற்றிய MIUI 9 கொண்டு இயக்கபடுவதுடன், கைரேகை சென்சார் பின்புறத்தில் வழங்கப்பட்டு கூடுதல் விருப்பங்களாக Wi-Fi, ப்ளூடுத், ஜிபிஎஸ், என்எஃப்சி, 4G VoLTE ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது.

சியோமி ரெட்மி 5 விலை பட்டியல்

சியோமி ரெட்மி 5 (2GB/16GB) – ரூ. 7,999

சியோமி ரெட்மி 5 (3GB/32GB) – ரூ. 8,999

சியோமி ரெட்மி 5 (4GB/32GB) – ரூ. 10,999

வருகின்ற மார்ச் 20ந் தேதி தொடங்குகின்ற விற்பனை இந்நிறுவனத்தின் mi.com, அமேசான் இந்தியா இணையதளத்தின் வாயிலாக கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீலம் ஆகிய நிறங்களை பெற்று விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானது இந்தியாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் வெளியானது