சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்சியோமி ரெட்மி 4 வெற்றியை தொடர்ந்து சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி 5 அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.

சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ்

சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்

மிக சிறப்பான கேமிங் மற்றும் படங்களை பதிவு செய்யும் திறனை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள ரெட்மி 5 கருவிகளில் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

கைரேகை சென்சார் பெற்ற மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, கோல்டு, லைட் ப்ளூ மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி 5 நுட்ப விபரங்கள்

ரெட்மி 5 மொபைல் போன் 5.7-inch HD+ 720×1440 பிக்சல் தீர்மானத்துடன் 18:9 ஆஸ்பெக்ட் பெற்று 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் உடன் உள்ளீட்டு சேமிப்பில் 16GB மற்றும் 32GB உடன் இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 3,300mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்

சியோமி ரெட்மி 5 பிளஸ் நுட்ப விபரங்கள்

ரெட்மி 5 பிளஸ் மொபைல் போன் 5.99-inch HD+ 1080×2160 பிக்சல் தீர்மானத்துடன் 18:9 ஆஸ்பெக்ட் பெற்று 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 650 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் உடன் உள்ளீட்டு சேமிப்பில் 32GB மற்றும் 64GB உடன் இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4,000mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்

ரெட்மி 5 விலை பட்டியல்

ரெட்மி 5 3GB RAM , 16GB ROM – ரூ.7800

ரெட்மி 5 3GB RAM , 16GB ROM – ரூ.8,800

ரெட்மி 5 பிளஸ் 3GB RAM , 32GB ROM – ரூ.9,700

ரெட்மி 5 பிளஸ் 4GB RAM , 64GB ROM – ரூ.12,700

விலை விபரம் சீனா விலை பட்டியலை பின்பற்றி வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here