சீனாவில் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம்பிரசத்தி பெற்ற சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் புதிய சியோமி ரெட்மி 5ஏ மொபைல் போன் மாடலை CNY 599 (ரூ.6000) மதிப்பில் விற்பனைக்கு சீனாவில் வெளியிட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5A

சீனாவில் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம்

முந்தைய ரெட்மி 4ஏ வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள சியோமி ரெட்மி 5A போன் 8 நாட்கள் வரையிலான பேட்டரி தாங்கும் 3,000mAh திறன் கொண்டதாக வந்துள்ளது. முந்தைய மாடலை விட சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டுமே 5ஏ பெற்றுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

வட்ட வடிவ கார்னர்களை கொண்டுள்ள ரெட்மி 5ஏ மொபைல் கோல்டு, பிளாட்டினம் கிரே மற்றும் செர்ரி ஆகிய மூன்று நிறங்களுடன் 5 அங்குல ஹெச்டி திரையுடன் 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம்

பிராசஸர் & ரேம்

1.4GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டு இயக்கப்படுகின்ற 2GB ரேம் மற்றும் 16ஜிபி ரோம் பெற்றிருப்பதுடன் கூடுதலான சேமிப்பை நீட்டிக்க 128ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

பின்புறத்தில் ரெட்மி 5ஏ மொபைல் போனில் பனரோமா, ஃபேசியல் நுட்பம், நிகழ்நேரத்தில் பல்வேறு ஃபில்டர்களை பயன்படுத்தும் வகையில் ƒ / 2.2 மற்றும் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ள ƒ / 2.0 ஆதரவை பெற்ற 5  மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம்

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்புலமாக கொண்ட MIUI 9 இயங்குதளம் கொண்டு செயல்படும் ரெட்மி 5ஏ போனில் இந்நிறுவனத்தின் அறிக்கையின் படி அதிகபட்சமாக 8 நாட்கள் பேட்டரி தாங்கும் 3,000mAh திறன் பெற்றதாக வந்துள்ளது.

மற்றவை

4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், அம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை பெற்றிருக்கின்றது.

சீனாவில் சியோமி ரெட்மி 5A மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம்

விலை

வருகின்ற திங்கள் முதல் சீனாவில் முன்பதிவு தொடங்கப்பட உள்ள சியோமி ரெட்மி 5ஏ மொபைல் விலை CNY 599 (ரூ.6000) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here