அமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ

சியோமி நிறுவனம், தனது புதிய படைப்பான ரெட்மீ 6 புரோ மொபைல்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன. இரண்டு ஸ்மார்ட் போன்’களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 12,999 ரூபாயாக இருக்கும்.
இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போன்களை வாங்குபவர்களுக்கு 2,200 ரூபாய் இன்ஸ்டாகேஸ்பேக் மற்றும் 4.5TB ரிலையன்ஸ் ஜியோ டேட்டாகளுக்கும் சலுகையாக கிடைக்கும்.

ரெட்மீ 6 புரே போனின் ஸ்பெசிபிகேஷன்கள் மற்றும் வசதிகள்

இந்த ஹான்ட்செட்கள் 5.84 இன்ச் FHD+ டிஸ்பிளே உடன் 19:9 அங்குல விகிதம் கொண்டதாக இருக்கும். இந்த போனில் உள்ள ஸ்க்ரீன்கள் ஐபோன் X போன்றதாகவே இருக்கும்.

கோல்கம் ஸ்நாப்டிராகன் 625 பிரசாசர்களுடன் வெளி வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்டிராய்டு 8.1 ஓரியோ ஆப்பிரேடிங் சிஸ்டமுடன், MIUI 9.6 லேயரில் இயங்கும்.கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் போனில் 5 மெஹாபிக்சல் AI செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டூயல் கேமரா செட்டப் உடன் பின்புறம் 12-மெஹா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெஹாபிக்சல் செகண்டரி சென்சார்களையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்களில் AI பேஸ் அனலாக் மற்றும் ரியர் மவுண்ட் பிங்கர்பிரிண்ட் ரீடர் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வெவேறு ஸ்லாட்களை கொண்டுள்ளதால, இரண்டு நானோ சிம்கள் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஒன்றையும் பொருத்தி கொள்ள முடியும்.

அமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ

ஏற்கனவே கூறியதை போன்று, இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன.

இந்த போனில் 4000mAH பேட்டரிகளுடன், இரண்டு நாள் பவர் பேக்அப் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இதில் டூயல் 4G, VoLTE 3G, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், கோல்ட், ப்ளூ மற்றும் ரெட் போன்ற கலர் ஆப்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.