சீனாவின் சியோமி நிறுவனம், புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 4000mAh பேட்டரியுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி பெற்று இயங்குகின்றது.
பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் இன்றைக்கு, சற்று முன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 7 போனில் 2 ஜிபி ரேம், 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என மொத்தம் மூன்று மாறுபாடுகளில் கிடைக்கின்றது.
சியோமி ரெட்மீ 7 ஸ்மார்ட்போன் விலை
கடந்த ரெட்மி 6 மாடலை தொடர்ந்து வெளியாகியுள்ள ரெட்மி 7 போன் பட்ஜெட் ரக வாடிக்கையார்கள் விரும்பும் வகையிலான வசதியுடன் பல்வேறு வசதிகளை கொண்டு ரூபாய் 7,000 இந்திய மதிப்பில் தொடக்கநிலை மாடல் அமைந்துள்ளது.
ரெட்மி 7, 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு, விலை ரூ.7,000 (699 யுவான்) 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு, விலை ரூ.8,000 (799 யுவான்) ரெட்மீ 7 மாடலின் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.10,000 (999 யுவான்) ஆகியவற்றில் மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
19: 9 என்ற ஆஸ்பெக்ட் விகிதத்தில் 6.26 அங்குல HD + காட்சி திரையை கொண்டு விளங்குகின்ற இந்த போனை இயக்க குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி பயன்படுத்தப்பட்டு மொத்தம் மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் நீறங்களில் கிடைக்கின்றது.
AI அம்சத்துடன் கூடிய கேமராவை பெற்று பின்புறத்தில் டூயல் கேமரா சென்சாரை பிரைமரி ஆப்ஷனில் பெற்று விளங்குகின்ற ரெட்மி 7-ல் 12 எம்பி மற்றும் உடன் 2 எம்பி என இரு சென்சார்களுடன் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற இந்த போனில் P2i என்ற கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோட்டிங் நீர் துளிகளில் இருந்த இந்த மொபைலை பாதுகாக்க உதவும், பின்புறத்தில் கை ரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi Redmi 7 specifications
- 6.26-inch (1520 × 720 pixels) HD+ 19:9 2.5D டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி 14nm Adreno 506 GPU
- 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு // 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்புe / 4 ஜிபி ரேம் / 64 ஜிபி சேமிப்பு
- 512GB மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) அடிப்படையில் MIUI 10
- டூயல் சிம் (nano + nano + microSD)
- 12MP கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ், 1.12um pixel size, f/2.2 மற்றும், 2MP கேமரா
- 8MP செல்பி கேமரா
- கைரேகை சென்சார், இன்ஃபிராரெட் சென்சார்
- 3.5mm audio jack, FM Radio
- அளவுகள்: 158.65×76.43×8.47mm; Weight: 180g
- Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS + GLONASS
- 4000mAh பேட்டரி