Home Tech News Mobiles Xiaomi Redmi 7: சியோமி ரெட்மி 7 மொபைல் விற்பனைக்கு வெளியானது

Xiaomi Redmi 7: சியோமி ரெட்மி 7 மொபைல் விற்பனைக்கு வெளியானது

சியோமி நிறுவனம், இன்றைக்கு ரெட்மி Y3 மொபைலை தொடர்ந்து ரெட்மி 7 மொபைல் போனை டூயல் கேமரா செட்-அப் கொண்டதாக ரூ.7,999 தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 29 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com, மீ ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு ரெட்மி 7 மொபைல் 2GB RAM உடன் 32GB சேமிப்பு ரூ.7999 விலையிலும், 3GB RAM உடன் 32GB சேமிப்பு ரூ.8,999 விலையிலும் கிடைக்க உள்ளது. இந்த மொபைல் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி 7 சிறப்புகள்

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றிய MIUI 10 கொண்டு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட்  பொருத்தப்பட்டு 2 ஜிபி, 3ஜபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் மெமரி கொண்டிருக்கின்றது. கேமரா சார்ந்த செயற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றதாக கிடைக்கப் பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் வீடியோ காலிங் கேமரா உள்ளது.

6.26 அங்குல முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அமைந்துள்ளது. 4000 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி கொண்டதாக ரெட்மி 7 விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிங்க – சியோமி ரெட்மி Y3 மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

Xiaomi Redmi 7 specifications

  • 6.26-inch (1520 × 720 pixels) HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 5
  • 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 632 14nm Mobile Platform with Adreno 506 GPU
  • 2GB RAM உடன் 32GB சேமிப்பு / 3GB RAM உடன் 32GB சேமிப்பு,
  • 512GB உடன் மைக்ரோஎஸ்டி அட்டை
  • ஆண்ட்ராய்டு 9 பின்பற்றி MIUI 10
  • இரட்டை சிம் கார்டு
  • 12MP உடன் எல்இடி ஃபிளாஷ், 1.12um pixel size, f/2.2 aperture, PDAF, செக்ன்டரி 2MP சென்சார்
  • 8MP செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார்
  • Splash resistant (P2i nano coating)
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • அளவுகள்: 158.73×75.58×8.47mm; எடை: 180g
  • Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS + GLONASS
  • 4000mAh பேட்டரி

Exit mobile version