Xiaomi Redmi 7

சியோமி நிறுவனத்தின் அடுத்த மாடலாக வரவுள்ள ரெட்மி 7 (Xiaomi Redmi 7) ஸ்மார்ட்போன் விலை மற்றும் நுட்ப விபரங்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் இணையத்தில் மீண்டும் கசிந்துள்ளது. ரெட்மி 6 வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பட்ஜெட் ரக மாடலாக இந்த போன் விளங்க உள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த விபரங்களில் சிப்செட் பெயர் வெளியாக நிலையில், தற்போது ஸ்ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி இடம்பெற்றிருக்கும் என யூடியூபில் கசிந்துள்ள தகவல் மூலம்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi Redmi 7 போனின் சிறப்புகள்

ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 6.26 அங்குல ஹெச்டி பிளஸ் திரையுடன் 1520 x 720 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்று, பெயர் அறியாத 1.8GHz ஸ்ஸ்னாப்டிராகன் 632 ஆக்டோ கோர் சிப்செட் பெற்றதாக, 2GB ரேம் உடன் 16GB சேமிப்பு வசதி, 3GB ரேம் உடன் 32GB  சேமிப்பு வசதி மற்றும் 4GB ரேம் உடன் 64GB சேமிப்பு வசதி என மொத்தமாக மூன்று வகை மாறுபாட்டில் கிடைக்கப்பெறும். கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வசதி தனியாக வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

பின்புறத்தில் 12 எம்பி மற்றும் 2 எம்பி என இரு கேமராவுடன், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 8 எம்பி சென்சார் வழங்கப்பட்டிருக்கும். இது முந்தைய  ரெட்மி 6 போலவே அமைந்திருக்ககூடும். ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 10 ஓஎஸ் கொண்ட இந்த மாடலில் பாதுகாப்பு சார்ந்த கைரேகை சென்சார் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, Xiaomi Redmi 7 பேட்டரி சார்ந்த அம்சமாக விரைவு முறை க்விக் சார்ஜ் பற்றி உறுதியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த போனில்  3,900mAh பேட்டரி இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, கைரேகை சென்சார் உள்ளிட்ட அடிப்படை ஆதரவுகளை இந்த மொபைல் பெற்றிருக்கும்.

ரெட்மி 7 போன் மாடல் முதற்கட்டமாக அடுத்த சில வாரங்களுக்குள் விற்னைக்கு வெளியிடுவது குறித்தான முக்கிய தகவல்கள் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். மார்ச் 18ந் தேதி சீனாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.