சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள்.!

சியோமி ரெட்மி 6 வெற்றியை தொடர்ந்து வரவுள்ள பட்ஜெட் ரக ரெட்மி 7 போனில் உள்ள முக்கிய அம்சங்கள் TENAA தளத்தில் வெளியாகியுள்ளது. ரெட்மி 7 மாடலில் மொத்தம் 8 விதமான நிறங்களுடன் பல்வேறு அம்சங்களை பெற்றதாக 3,900mAh பேட்டரியை கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில், சில நாட்களுக்கு முன்னதாக ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ர்ட்மி நோட் 7 ஆகிய இரு மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக ரெட்மி 7 தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது.

ஷியோமி நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ரெட்மி நிறுவனம் , தற்போது தனியான நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக சியோமி விளங்குகின்றது.

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள்.!

ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் வசதிகள்

TENAA மூலம் வெளிவந்த விபரங்களளின் அடிப்படையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் 6.26 அங்குல ஹெச்டி திரையுடன் 1520 x 720 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்று, பெயர் அறியாத 1.8GHz ஆக்டோ கோர் சிப்செட் பெற்றதாக, 2GB ரேம்/16GB சேமிப்பு வசதி, 3GB ரேம்/32GB  சேமிப்பு வசதி மற்றும் 4GB ரேம் /64GB சேமிப்பு வசதி என மொத்தமாக மூன்று வகை மாறுபாட்டில் கிடைக்கப்பெறும். கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

பின்புறத்தில் 12 எம்பி மற்றும் 2 எம்பி என இரு கேமராவுடன், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 8 எம்பி சென்சார் வழங்கப்பட்டிருக்கும். இது முந்தைய  ரெட்மி 6 போலவே அமைந்திருக்ககூடும். ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 10 ஓஎஸ் கொண்ட இந்த மாடலில் கைரேகை சென்சார் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 7 போன் மாடல் முதற்கட்டமாக அடுத்த சில வாரங்களுக்குள் ஒரு சில நாடுகளில் விற்பனைக்கு வெளியாகும் என குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போனில் பேட்டரி சார்ந்த அம்சமாக விரைவு முறை சார்ஜ் பற்றி உறுதியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த போனில்  3,900mAh பேட்டரி இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, கைரேகை சென்சார் உள்ளிட்ட அடிப்படை ஆதரவுகளை இந்த மொபைல் பெற்றிருக்கும்.

சமீபத்தில் இந்தியாவில் வெளியான ரெட்மி நோட் 7 வரிசையின் விலை விபரம் பின் வருமாறு;-

9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

redmi note 7 pro

4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியன்டின் 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.