redmi 7a price

இந்தியாவில் சியோமி நிறுவனம், ரூபாய் 5,999 ஆரம்ப விலையில் சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ரெட்மி 4A, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 6A மாடல்களை தொடர்ந்து ரெட்மி 7A வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ரெட்மி 7ஏ மொபைல் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ. 5,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் ரக மாடல் ரூ .6,199 என வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி முதல் mi.com, பிளிப்கார்ட் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும் முதல்முறையாக, சியோமி இரண்டு வருட உத்தரவாதத்துடன் ரெட்மி ஸ்மார்ட்போனை வழங்குகிறது.

அறிமுக சிறப்பு சலுகையாக, ஜூலை மாதத்தில் மட்டும் புதிய ரெட்மி 7ஏ வாங்குவோருக்கு மட்டும் சியோமி ரூ. 200 தள்ளுபடி வழங்குகின்றது. எனவே, ரெட்மி 7ஏ 16 ஜிபி வேரியண்ட் ரூ.5,799, 32 ஜிபி வேரியண்ட் ரூ .5,999 க்கு கிடைக்கும்.

Xiaomi Redmi 7A சிறப்புகள்

மிக சிறப்பான பல்வேறு வசதிகளை குறைந்த விலையில் வழங்குகின்ற இந்நிறுவனத்தின் ரெட்மி 7 ஏ போன் 5.45 அங்குல (1440 x 720 பிக்ல்ஸ்) திரையை கொண்டு 18:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பினை கொண்டுள்ளது. இந்த போனை இயக்க ஆக்டோ கோர் ஸ்னாப் டிராகன் 439 சிப்செட் கொண்டு 2ஜிபி ரேம் மாறுபாட்டில் முறையே 16 ஜிபி , 32ஜிபி உள் மெமரி கொண்டிருக்கின்றது. மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 256 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

கேமரா பிரவில் எல்இடி ஃபிளாஷ் ஆதரவை பெற்ற ஏஐ உடன் கூடிய 13 மெகாபிக்சல் பிரைமரி மற்றும் வீடியோ கால் , செல்ஃபி அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

மேட் ப்ளூ, மேட் கோல்ட் மற்றும் மேட் பிளாக் என மூன்று நிறங்களுடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 4000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

சியோமி ரெட்மி 7A

Xiaomi Redmi 7A specifications

  • 5.45 அங்குல (1440 x 720 பிக்ல்ஸ்) 18:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
  • Octa-Core (Quad 1.95GHz Cortex A53 + Quad 1.45GHz Cortex A53) ஸ்னாப்டிராகன் 439 Mobile Platform with Adreno 505 GPU
  • 2GB RAM உடன் 16GB உள் சேமிப்பு / 32GB உள் சேமிப்பு
  • 256GB உடன் மைக்ரோ எஸ்டி ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை MIUI 10
  • Dual SIM (nano + nano / microSD)
  • 13MP ரியர் கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ், PDAF
  • 5MP முன்புற கேமரா
  • 3.5mm ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
  • ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ட் (P2i nano coating)
  • அளவுகள்: 146.30×70.41×9.55mm; எடை: 150g
  • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்
  • 4000mAh