சியோமி ரெட்மி 7A

ரூ.5000 விலையில் சியோமியின் ரெட்மி 7A ஸ்மார்ட்போன் மாடல் 13 மெகாபிக்சல் கேமராவுடன் சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதள ஆதரவுடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி பெற்றுள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரெட்மி கே20 அறிமுகத்தின்போது அதிகார்வப்பூர்வ ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் விலை விபரம் வெளியாக உள்ளது.

சியோமி ரெட்மி 7A சிறப்புகள்

வரும் மே 28 ஆம் தேதி சீனாவில் கில்லர் சீரிஸ் என அறியப்படுகின்ற ரெட்மி கே20 போன் வெளியிடப்பட உள்ளது. இந்த போனில் 13 எம்பி கேமரா, 4000mAh பேட்டரி இரட்டை 4ஜி ஆதரவு போன்றவை கவனிக்க வேண்டியதாக உள்ளது.

கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களை பெற்று 5.45 அங்குல (1440 x 720 பிக்ல்ஸ்) திரையை கொண்டு 18:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பினை கொண்டுள்ள இந்த போனை இயக்க ஆக்டோ கோர் ஸ்னாப் டிராகன் 439 சிப்செட் கொண்டு 2ஜிபி , 3ஜிபி என இருவிதமான ரேம் மாறுபாட்டில் முறையே 6 ஜிபி , 32ஜிபி உள் மெமரி கொண்டிருக்கின்றது. மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 256 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

கேமரா பிரவில் எல்இடி ஃபிளாஷ் ஆதரவை பெற்ற 13 மெகாபிக்சல் பிரைமரி மற்றும் வீடியோ கால் , செல்ஃபி அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 4000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

சியோமி ரெட்மி 7A

Xiaomi Redmi 7A specifications

 • 5.45 அங்குல (1440 x 720 பிக்ல்ஸ்) 18:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
 • Octa-Core (Quad 1.95GHz Cortex A53 + Quad 1.45GHz Cortex A53) ஸ்னாப்டிராகன் 439 Mobile Platform with Adreno 505 GPU
 • 2GB RAM உடன் 16GB உள் சேமிப்பு / 3GB RAM உடன் 32GB உள் சேமிப்பு
 • 256GB உடன் மைக்ரோ எஸ்டி ஆதரவு
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை MIUI 10
 • Dual SIM (nano + nano / microSD)
 • 13MP ரியர் கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ், PDAF
 • 5MP முன்புற கேமரா
 • 3.5mm ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
 • ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ட் (P2i nano coating)
 • அளவுகள்: 146.30×70.41×9.55mm; எடை: 150g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்
 • 4000mAh