redmi 8a

சியோமியின் அடுத்த மாடலாக விற்பனைக்கு வரவுள்ள ரெட்மி 8A பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் தொடர்ந்து பட்ஜெட் விலை மாடலாக விற்பனைக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. பல்வேறு டீசர்கள் வெளியாகியுள்ள நிலையில் ரெட்மி 8ஏ மொபைலில் இடம்பெற உள்ள சில முக்கிய நுட்பவிபரங்களை தொடர்ந்து இங்கே காணலாம்.

ரெட்மி இந்தியா சமீபத்தில் வெளியிட்டிருந்த டீசரின்படி 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று சுட்டிக்காட்டியது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, கைபேசி சமீபத்தில் TENAA இல் காணப்பட்டது. ரெட்மி 8A இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை இந்த பட்டியல் வெளிப்படுத்தியது. இந்த மொபைல் போன் 4ஜி எல்டிஇ இணைப்பு, இரட்டை சிம் கார்டு, MIUI 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் உடன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவுடன்  HD + தெளிவு திரையை கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

சியோமி ரெட்மி 8A மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC மூலம் இயக்கப்படுவதுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வழங்க வாய்ப்புள்ளது. கேமராவைப் பொருத்தவரை, ரெட்மி 8ஏ மொபைலில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் பெற்றிருக்க்கும் எனவும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கக்கூடும். கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி ஸ்லாட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5000mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட உள்ளது.