xiaomi-redmi-8a-dual

டூயல் கேமரா ஆப்ஷனை பெற்ற சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரியுடன் வந்துள்ள மாடல் ரூ.6,499 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 18 ஆம் தேதி அமேசான் இந்தியா மற்றும் mi இணையதளத்திலும் கிடைக்க உள்ளது.

ரெட்மி 8 ஏ டூயலில் 6.22 இன்ச் எச்டி+ திரை முன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் டாட் நாட்ச் டிஸ்ப்ளேவினை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ரெட்மி 8A மொபைலில் உள்ள ஐபிஎஸ் எல்சிடி பேனல் பெற்றுள்ளது. சீ ப்ளூ, மிட்நைட் கிரே மற்றும் ஸ்கை வைட் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். புதிய ஆரா எக்ஸ் கிரிப் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் 2 ஜிபி  அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் என்பதால், சியோமி நிறுவனம் 512 ஜிபி வரை கூடுதலாக நீட்டிக்க பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை கொடுத்துள்ளது.

இந்த மொபைலில் 12 எம்பி கேமரா உடன் கூடுதலாக 2 எம்பி டெப்த் சென்சார் உடன் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்கு என 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற இந்த மாடலில் 18W வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இரட்டை 4ஜி சிம் கார்டு, வோல்டிஇ, விவோ-ஃபை, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை பெற்றுள்ளது.

ஷியோமி Redmi 8A dual பிப்ரவரி 18, 2020 முதல் அமேசான், மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோரிலும் கிடைக்கும். விரைவில் ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்கலாம்.

Redmi 8A dual  2 ஜிபி + 32 ஜிபி ரூ.6,499

Redmi 8A dual  3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ .6,999