புதிய சியோமி ரெட்மி 9 விற்பனைக்கு அறிமுகமானது

சியோமி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி 9 குவாட் கேமரா செட்டப் பெற்று முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. ஸ்பெயினில் ரெட்மி 9 விலை €148 (ரூ.12,724) துவங்குகின்றது.

முன்பாகவே ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் வெளியானதை தொடர்ந்து இப்போது விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஐரோப்பிவில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி 9 விவரக்குறிப்புகள்

ரெட்மியின் கே30, போகோ எக்ஸ்2 போன்ற மொபைல்களின் டிசைன் வடிவத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ரெட்மி 9 போனில் 6.53 அங்குல IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டு 89.83% ஸ்கீரின் டூ பாடி விகிதத்துடன் (1,080 x 2,400p) பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ G80 சிப்செட் பொருத்தப்பட்டு 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

ரெட்மி 9 பிரைமரி குவாட் கேமரா ஆப்ஷனில் முதன்மையாக 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 5 மெகாபிக்சல் டெலிபோட்டோ மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கின்றது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 வீடியோ பதிவினை [email protected] அல்லது [email protected] என இரு முறையில் பதிவு செய்ய இயலும். இரட்டை சிம் கார்டு, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 18W விரைவு சார்ஜருடன் 5020mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.

புதிய சியோமி ரெட்மி 9 விற்பனைக்கு அறிமுகமானது

ரெட்மி 9 விலை

சியோமி ரெட்மி 9 மொபைல் 4 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு – €148 (ரூ.12,724)

ரெட்மி 9 மொபைல் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு – €179 (ரூ.15,389)