ரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது

குவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் சிறப்புகள்

ரெட்மி 9 பவர் மொபைலில் 6.53 இன்ச் LCD Dotdrop திரையுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி சேமிப்பு அதிகபட்சமாக 128ஜிபி சேமிப்புடன் கூடுதலாக 512ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற மாடலில் சூப்பர் குவாட் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டு பிரைமரி ஆப்ஷனில் 48 எம்பி, 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 எம்பி கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

பக்கவாட்டில் கைரேகை சென்சாருடன் 6000mAh பேட்டரியுடன் 18W விரைவு சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும், டூயல் சிம் கார்டு வசதியுடன் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி Type-C ஆகியவற்றை பெற்றிருக்கும்.

ரெட்மி 9 பவர் மாடல் மைட்டி பிளாக், ஃபைரி ரெட், எலக்ட்ரிக் கிரீன் மற்றும் பிளேசிங் ப்ளூ வண்ணங்களில் கிடைக்க உள்ளது. இந்த மாடல் அமேசான் இந்தியா, mi.com மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ், மி ஸ்டுடியோஸ் மற்றும் மி ஸ்டோர்ஸ் ஆகியவற்றிலிருந்து டிசம்பர் 22 முதல் கிடைக்கும்.

ரெட்மி 9 பவர் 4GB+64GB – ரூ.10,999

ரெட்மி 9 பவர் 4GB+128GB – ரூ.11,999