redmi go

இந்தியாவின் முதன்மையான சவுமீ மொபைல் தயாரிப்பாளரின், ஆண்ட்ராய்டு கோ அடிப்படையிலான ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான எதிர்பார்ப்புகளை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

நாளை (மார்ச் 19,2019) வெளியிடப்பட உள்ள இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுகின்ற கூகுளின் மிக விரைவாக குறைந்த ரேம் கொண்ட மாடல்களில் இயங்கும் போனாக விளங்க உள்ளது.

ரெட்மி கோவின் நுட்பவிபரங்கள்

5 அங்குல எல்சிடி டிஸ்பிளேவை பெற்ற இந்த மொபைல் போன் மாடலில் 1280 x 720 பிக்சல்ஸ் திர்மானத்துடன், ஆண்டராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்று விளங்குகின்றது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை விரிவுப்படுத்த ஹைபிரிட் ஸ்லாட் மட்டும் வழங்க உள்ளது.

சவுமீ ரெட்மி கோ விலை

கேமரா தொடர்பான பிரிவில் பிரைமரி சென்சாராக  f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள ரெட்மியின் கோ போனின் கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெற வழங்கப்பட்டுள்ளது. நாள் முழுமைக்கும் அதிகப்படியான பயன்பாட்டின் போதும் நீண்ட ஆயுளை வழங்க வல்ல 3000 மில்லிஆம்பியர் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க மாற்றங்கள்

சாதாரண ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விட 15 சதவீத கூடுதல் வேகத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கோ பதிப்பினை பெற்ற இந்த போனில் கோ சார்ந்த அடிப்படை செயலிகள் முன்னேற்பாடாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட சுமார் 20க்கு மேற்பட்ட இந்திய மொழி ஆதரவை ரெட்மீ கோ போன் பெற்றிருக்கும் என்ற காரணத்தால் பயனாளர்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் தாய்மொழியில் பயன்படுத்த வழிவகுக்கும்.

குறைந்த விலை சவுமீ ரெட்மி கோ பற்றி அறிய வேண்டியவை

சவுமீ குறைந்த விலை போன்

சமீபத்தில் சவுமீ நிறுவனம் ரெட்மீ நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில் பட்ஜெட் விலை கொண்ட மாடலாக ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூபாய் 4500 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்த மொபைல் போனுக்கு போட்டியாக நோக்கியா 1 , சாம்சங் ஜே2 கோர், நோக்கியா 2.1 மற்றும் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ, லாவா இசட்50 ஆகியவற்றுடன் புதிதாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர், நோக்கியா 1 பிளஸ் போனும் இடம்பெற உள்ளது.

சவுமீ ரெட்மி கோ போன் விலை