Redmi Go: ரெட்மி கோ ஸ்மார்ட்போன் நள்ளிரவு 12.00 மணிக்கு விற்பனைக்கு வரும்

குறைந்த விலையில் கிடைக்கின்ற ரெட்மி கோ (Redmi Go) ஸ்மார்ட்போன் மாடலின் ஃபிளாஷ் விற்பனை 8 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்க உள்ளது. முன்பாக பல்வேறு முறை ஃபிளாஷ் முறையில் கோ போன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் இந்த மொபைல் போனுக்கு சிறப்பு ரூ.2200 கேஸ்பேக் சலுகை மற்றும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ள இந்த மொபைல் போனை விட குறைந்த விலையில் நோக்கியா 1 விற்பனைக்கு கிடைக்கின்றது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் விற்பனை விபரம்

ரூ. 4,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற ரெட்மீ கோ போன் மாடல் இந்தியாவில் 12.00 AM மணிக்கு விற்பனை தொடங்கப்பட உள்ளது.  mi.com , மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரேட்

5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்று கோ மொபைல் போன் மாடலில் 1280 x 720 பிக்சல்ஸ் திர்மானத்துடன், ஆண்டராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் பெற்று ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை ஆதரிக்கும் திறன் கொண்டுள்ளது.

3000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற ரெட்மி கோ போனின் கேமரா பிரிவில் பிரைமரி சென்சாராக  f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள ரெட்மியின் கோ போனில் கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெற வழங்கப்பட்டுள்ளது.

xiaomi redmi go

Xiaomi Redmi Go specifications

  • 5 அங்குல ஹெச்டி திரை (1280 x 720 பிக்சல்ஸ்) 16:9 ஆஸ்பெக்ட் விகிதம்
  • 1.4GHz  குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 உடன் Adreno 308 ஜிபியூ
  • 1GB RAM, 8GB சேமிப்பு வசதி,
  • 128GB மைக்ரோ எஸ்டி அட்டை
  • ஆண்ட்ராய்டு 8.1 (கோ எடிசன்)
  • இரட்டை சிம் கார்டு ஆதரவு
  • 8MP கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.0 துவாரம்
  • 5MP கேமரா f/2.2 துவாரம், 1.12μm pixel size
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • அளவுகள்:140.4x 70.1 x 8.35mm; எடை: 137g
  • 4G வோல்ட்இ, ஒய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்
  • 3000mAh பேட்டரி

Redmi Go: ரெட்மி கோ ஸ்மார்ட்போன் நள்ளிரவு 12.00 மணிக்கு விற்பனைக்கு வரும்