xiaomi redmi go

பட்ஜெட் ரக மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 4,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக மற்றும் வேகமாக இயங்கும் வகையிலான ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி கோ போன் விளங்குகின்றது.

தமிழகத்தில் தற்போது ஃபிளக்ஸ் நிறுவனத்த்தின் மூலம் ரெட்மி மொபைல்களை உற்பத்தி செய்ய சியோமி புதிய ஆலையை திறந்துள்ளது. சியோமி நிறுவனம் இந்தியாவில் 7 ஆலைகளில் , ஃபிளெக்ஸ், ஃபாக்ஸ்கான், மற்றும் ஹைபேட் என மூன்று  தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.  ஒரு விநாடிக்கு மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியாவில் மி பே (Mi Pay app ) ஆப் வசதியை சியோமி இன்றைக்கு இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

xiaomi redmi go news in tamil

சியோமி ரெட்மி கோ விலை மற்றும் சிறப்புகள்

5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்று கோ மொபைல் போன் மாடலில் 1280 x 720 பிக்சல்ஸ் திர்மானத்துடன், ஆண்டராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்று விளங்குகின்றது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை விரிவுப்படுத்தவும், ஒரே சமயத்தில் இரு சிம் கார்டுகள் மற்றும் எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

redmi go

கேமரா பிரிவில் பிரைமரி சென்சாராக  f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள ரெட்மியின் கோ போனில் கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெற வழங்கப்பட்டுள்ளது.

3000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் கூடுதல் ஆதரவுகளாக 4ஜி வோல்ட்இ,  வை-ஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட கூடுதல் ஆதரவுகளை கொண்டுள்ளது. மார்ச் 22ந் தேதி பகல் 12 மணிக்கு முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் மீ ஸ்டோர்களில் கிடைக்கும்.

Xiaomi Redmi Go specifications

  • 5-inch (1280 x 720pixels) HD 16:9 ஆஸ்பெக்ட் விகிதம்
  • 1.4GHz Quad-Core ஸ்னாப்டிராகன் 425 உடன் Adreno 308 GPU
  • 1GB RAM, 8GB சேமிப்பு வசதி,
  • 128GB மைக்ரோ எஸ்டி அட்டை
  • ஆண்ட்ராய்டு 8.1 (Oreo Go Edition)
  • இரு சிம்
  • 8MP கேமரா LED Flash, f/2.0 aperture, 1.12μm pixel size
  • 5MP கேமரா f/2.2 aperture, 1.12μm pixel size
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • அளவுகள்:140.4x 70.1 x 8.35mm; எடை: 137g
  • 4G வோல்ட்இ, ஒய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்
  • 3000mAh பேட்டரி

ரூ.4,499 விலையில் சியோமி ரெட்மி கோ இந்தியாவில் அறிமுகம்