ஷியோமி ரெட்மி கோ மொபைல் விபரம் வெளியிடப்பட்டது

புதிதாக வரவுள்ள ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்ற ஷியோமி ரெட்மி கோ மொபைல் போன் தொடர்பான நுட்ப விபரங்கள் அதிகார்வப்பூர்வமாக ரெட்மி வெளியிட்டுள்ளது. ரூ.5000க்கு ரெட்மி கோ வெளியாகலாம்.

ஷியோமி ரெட்மி கோ மொபைல்

இந்தியா உட்பட சர்வதேச அளவில் வளரும் நாடுகளில் செயல்படுத்தப்படும் ரெட்மி கோ மொபைல் போனின் முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள ரெட்மி கோ போனின் விலை ரூ.5000 அல்லது அதற்கு குறைவாக அமைந்திருக்கலாம்.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

5 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை பெற்ற இந்த மொபைல்போன் 1280 x 720 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் விளங்குகின்றது. இந்த மொபைல் போன் மிக நேர்த்தியாக எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய பிரைமரி கேமரா பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மாருட்போன் கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசெஸர் மற்றும் ரேம்

ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையிலான MIUI கோ கொண்டு செயல்படுகின்ற ரெட்மி கோ போனில் குவால் காம் நிறுவனத்தின் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை இணைத்துக் கொள்ளலாம்.

ஷியோமி ரெட்மி கோ மொபைல் விபரம் வெளியிடப்பட்டது

ரெட்மி கோ மொபைல் கேமரா

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்ற ரெட்மி கோ மொபைலில் f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புற கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ பதிவு செய்வதற்காக இடம்பெற்றிருக்கும்.

பேட்டரி

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்ற இந்த மாடலில் 3000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற மொபைலாக இந்த மாடல் விளங்கும்.

மற்றவை

டூயல் சிம் கார்டு வசதி, டூயல் 4ஜி சிம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்,  Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, மைக்ரோ USB மற்றும் USB 2.0 ஆகியவற்றை பெற்றிருக்கும் மாடலாக விளங்கும்.

ஷியோமி ரெட்மி கோ மொபைல் விபரம் வெளியிடப்பட்டது