ரூ.4000க்கு வரவுள்ள ரெட்மி கோ ஸ்மார்ட்போன் நுட்ப விபரம் லீக் ஆனது

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பின்பற்றிய சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரெட்மி கோ ரேட் ரூ.4000 என தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ வெர்ஷனில் இயங்கும் மாடலாக வெளியாக உள்ள  ரெட்மி கோ போன் மிக சிறப்பான விலையில் அதிக அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

5 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை பெற்ற இந்த மொபைல்போன் 1280 x 720 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் விளங்குகின்றது. இந்த மொபைல் போன் மிக நேர்த்தியாக எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய பிரைமரி கேமரா பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசெஸர் & ரேம்

ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் கொண்டு செயல்படுகின்ற ரெட்மீ கோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை இணைத்துக் கொள்ளலாம்.

ரெட்மி கோ கேமரா

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்ற ரெட்மி கோ மொபைலில் f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ கேமரா இடம்பெற்றிருக்கும்.

பேட்டரி

3000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற மொபைலாக இந்த மாடல் விளங்கும்.

மற்றவை

டூயல் சிம் கார்டு வசதி, டூயல் 4ஜி சிம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்,  Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, மைக்ரோ USB மற்றும் USB 2.0 ஆகியவற்றை பெற்றிருக்கும் மாடலாக விளங்கும்.

ரூ.4000க்கு வரவுள்ள ரெட்மி கோ ஸ்மார்ட்போன் நுட்ப விபரம் லீக் ஆனது

ரெட்மி கோ விலை

முதற்கட்டமாக பிலிபைன்ஸ் நாட்டில் வெளியிடப்பட உள்ள ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்குள் வெளிவரவுள்ளது. ரெட்மி கோ மொபைல் விலை ரூ.4000 அல்லது அதற்கு குறைவாக அமைந்திருக்கலாம்.