சியோமி ரெட்மீ K20

சியோமியின் ரெட்மி கில்லர் சீரிஸ் மாடலின் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் அனைத்து முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. மூன்று கேமரா வசதியுடன் செல்ஃபி பிரிவில் பாப் அப் கேமரா கொண்டிருக்கின்றது.

டிவிட்டரில் வெளியாகியுள்ள சமீபத்திய தகவலின் படி கே20 போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் சிறப்புகள்

AnTuTu பெஞ்ச்மார்க் ஸ்கோர் விபரத்தின் அடிப்படையில் 458,754 மதிப்பை பெற்றதாக அமைந்துள்ளது. கே20 போனில் 6.39 அங்குல OLED திரையுடன் FHD+ (2340×1080 பிக்சல்ஸ்) தீர்மானத்துடன் கூடியதாக 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை பெற்றதாக ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் 64GB+6GB RAM, 128GB+6GB RAM, 128GB+8GB RAM, மற்றும் 256GB+8GB RAM  போன்ற மாறுபாட்டில் கிடைக்கப் பெறலாம். கேமரா பிரிவில் உள்ள முக்கிய விபரங்களை காணலாம். புதிய தகவல் கசிவின்படி பிரைமரி கேமரா ஆப்ஷனில் மூன்று கேமரா பெற்றதாக விளங்க உள்ளது.

48 மெகாபிக்சல் கேமரா சென்சார், 13 மெகாபிக்சல் சூப்பர் வைட் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கொண்டதாக விளங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள முன்புற கேமரா பிரிவில் பாப் அப் மெக்கானிசம் முறையில் 20 மெகாபிக்சல் கேமரா சென்சார் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

அடுத்ததாக ரெட்மி கே20 பேட்டரி தொடர்பான விபரத்தில் 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் 4,000mAh பேட்டரி கொண்டதாக அமைந்திருக்கும். கார்பன் ஃபைபர், ரெட், மற்றும் நீலம் என மூன்று நிறங்களை பெற்றிருக்கும். சீனாவில் மே 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனில் புதிதாக ரெட்மி நோட் 7எஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது.